Popular Posts

Monday 12 September 2011

மறியல் போராட்டம்

                                                                        (பைல் படம்).                                

ஒப்பந்தத்தை நிறைவேற்ற
மறுக்கும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக்
கண்டித்து செப்.17-ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

Saturday 10 September 2011

புகார்...


பெண் பயணியிடம் தகராறு செய்த பஸ் கண்டக்டர் மீது
காவல் நிலையத்தில்

Friday 9 September 2011

நேரத்தை நீட்டிக்க வலியுறுத்தல்

                                                             தமிழகத்தின்

சிறந்த சுற்றுலாத் தலமாகவும், கோயில் நகராகவும் பிரசித்தி பெற்ற

கொடுமுடிக்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து நாள்தோறும்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வந்துசெல்கின்றனர்.

   இங்கு ரயில் மூலம் வரும் வெளி மாநிலப்பயணிகள் மற்றும் கொடுமுடி

சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், மாணவர்கள், பொதுமக்கள்

உள்ளிட்டோர் கம்ப்யூட்டர் முன்பதிவுக்காக ரயில்நிலையத்திற்கு காலை 8

மணிக்கு சென்றால் 10 மணிக்குதான் முன்பதிவு தொடங்கும் என ஊழியர்கள்

கூறுகின்றனர்.

    ஈரோடு, கரூர் உள்ளிட்ட மற்ற ரயில்நிலையங்களில் காலை 8 மணிக்கு

துவங்கும் முன்பதிவு கொடுமுடியில் 10 மணிக்கு துவங்குவதால் இப்பகுதி

பயணிகளுக்கு தேவையான முன்பதிவு டிக்கட் கிடைப்பதில்லை. மேலும் மாலை 5

மணிக்கு முன்பதிவு நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

முன்பதிவு நேரத்தை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீட்டிக்க வேண்டும்.

நீதி மன்ற புறக்கணிப்பு..






டெல்லியில் உயர்நீதி மன்றத்தின் ஐந்தாம் எண் நீதி மன்ற நுழைவு வாயிலில்
தீவிரவாதிகளால் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில்
12 பேர் இறந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். சம்பவத்தில் தொடர்புடைவர்களை
டெல்லிபோலிசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக காஷ்மீரை சேர்ந்த
இண்டர் நெட் மைய உரிமையாளர் ஒருவரையும் அவரது சகாக்கள் இருவரையும்
போலிசார் கைது செய்துள்ளனர்.

  மேற்கொண்டு தேடுதல் நடந்து வருகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும்
அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது.

   இன்று ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்
வழக்குரைஞர்கள் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களை
கைது செய்யக்கோரியும் கண்டணம் தெரிவித்தும் ஒரு நாள் நீதி மன்ற
புறக்கணிப்பு செய்தனர்.

புறக்கணிப்புபோராட்டத்தில் வழக்குரைஞர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன்,
செயலாளர் தணிகாசலம், பொருளாளர் ரமேஷ் உள்ளிட்ட வழக்குரைஞர்கள்
கலந்துகொண்டனர்.

திருட்டு...



 கொடுமுடி அருகே

பேருந்துகளை இயக்க கோரிக்கை

            
 ஈரோடு மாவட்டம் கொடுமுடியை..